திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, அடையாளம் தெரியாத நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்துக்கு புகார் அளித்துள்ளனர்.
பூமிக்கடியில் மறைத்து வைத்திருந்த 1550 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு! - Tiruvanamalai District News
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பூமிக்கடியில் மறைத்து வைத்திருந்த 1550 லிட்டர் கள்ளச்சாராய ஊறலைக் காவல் துறையினர் கொட்டி அழித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்டா காவல் துறையினர் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிநவீன முறையில் சாராயம் காய்ச்சுவதற்கான சிறப்பு இயந்திரங்களை, இதற்கென்றே வடிவமைத்து, பாறை இடுக்குகளில் மறைவான இடங்களில் ஊறல்களை வைத்திருந்தது காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, மணலுக்கு அடியில், பாறைகளுக்கிடையே வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் 1550 லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டது. சாராயம் காய்ச்சிய நபர்கள் குறித்து காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
கரோனா காலத்தில் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி எழுதிய கடிதத்தால் கேந்திர வித்தியாலயாவில் கட்டணமின்றி பயிலும் மாணவி!