திருவண்ணாமலை: திருத்தணி அருகே கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 15 மேல்மருவத்தூர் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 15 மேல்மருவத்தூர் பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.