திருவண்ணாமலை: சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. 30 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து இன்று(சனிக்கிழமை) திருவண்ணாமலை அடுத்து உள்ள அத்தியந்தல் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி மறுபுறத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம்! - அரசு மருத்துவமனை
Tiruvannamalai Bus Accident: திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல்(Athiyandal) பகுதியில் சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.
bus accident tiruvannamalai
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை தாலுகா போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் - மதுரை கோட்ட மேலாளர் தகவல்