கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலங்களில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் விதமாக காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட சில கடைகள் செயல்படலாம் எனவும், தமிழ்நாடு அரசு விதித்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மதிக்காமல் வழக்கம் போல் இயங்கி வருகின்றனர். இதனைத்தடுக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வீட்டை விட்டு வெளியேறுவோர் மீது வழக்குப்பதிவு செய்தும், கரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.
இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்வகையில், பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிந்துவருகின்றனர்.