தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்... 144 லிட்டர் கள்ளச்சாராயம்! தொடரும் அதிரடி நகர்வுகள் - கள்ளச்சாராயம் ஊரல்

1250 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும், 144 லிட்டர் கள்ளச் சாராயம் வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

By

Published : May 19, 2020, 11:11 AM IST

திருவண்ணாமலை: காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 144 லிட்டர் கள்ளச் சாராயம் பிடிப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர், டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து மது விலக்கு தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

இச்சமயத்தில், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா ஐங்குணம் பகுதியில் 250 லிட்டர், மதுரம்பட்டு பகுதியில் 500 லிட்டர், வெறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்டம்பள்ளம் பகுதியில் 500 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் என மொத்தம் 1250 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள்

செங்கம் தாலுக்கா பி.எல்.தண்டா பகுதியில் 14 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த பானுதுரை, சின்னதுரை, குபேந்திரன் என்பவர்களையும், கலசபாக்கம் தாலுக்கா, மேல்சோழங்குப்பம் பகுதியில் 90 லிட்டர் கள்ளச் சாராயம் வைத்திருந்த போத்தராஜா என்பவரையும், செங்கம் தாலுக்கா அன்னந்தல் பகுதியில் 40 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த வாசுதேவன், சக்திவேல், சங்கர், முனியன் என, இவர்கள் மொத்தமாக வைத்திருந்த 144 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details