தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியில் மீன் பிடித்தவர்கள் காவல்துறையினரை கண்டு தப்பி ஓட்டம்! - ஏரியில் பிடித்த மீன்கள்

திருவண்ணாமலை: 144 தடை உத்தரவை மீறி, ஏரியில் மீன் பிடித்த 20 பேர், காவல் துறையினரைக் கண்டதும் மீன்களை ஏரியிலேயே விட்டுவிட்டு தலை தெறிக்க தப்பி ஓடினர்.

ஏரியில் மீன் பிடித்தவர்கள் போலிசாரை கண்டு மீன்களை விட்டு தப்பி ஓட்டம்
ஏரியில் மீன் பிடித்தவர்கள் போலிசாரை கண்டு மீன்களை விட்டு தப்பி ஓட்டம்

By

Published : May 3, 2020, 11:38 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எஸ். மோட்டூர் கிராமத்தில் 144 தடை உத்தரவை மீறி, 20க்கும் மேற்பட்டோர் ஏரியில் கும்பலாக சேர்ந்து மீன் பிடித்து வந்தனர். பிடித்த மீன்களை அங்கேயே விற்பனையும் செய்தனர். மீன்களை வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வந்தவாசி காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களை எச்சரித்தனர்.

தடை உத்தரவை மீறி ஏரியில் மீன் பிடித்தவர்கள் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட்டம்

காவல் துறையினரைக் கண்டதும் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் 200 கிலோ மீன், வலை மற்றும் எடை தராசு போன்றவற்றை ஏரிக்கரையில் போட்டுவிட்டு தப்பினால் போதும் என்று தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

கைப்பற்றிய 200 கிலோ மீன்களை ஏரி தண்ணீரிலேயே காவல் துறையினர் விட்டனர். மீன் வலை மற்றும் எடை தராசு ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:

தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காத மீன் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details