திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 1) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 430ஆக இருந்தது. இன்று புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதியான நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 444ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 145ஆக உள்ளது. சென்னையிலிருந்து வந்த ஒருவர், கர்நாடகாவில் இருந்து வந்த 5 பேர், உள்ளூரில் தொற்று ஏற்பட்ட இருவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் புதிதாக 14 பேருக்கு கரோனா பாதிப்பு! - திருவண்ணாமலையில் 444 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை: இன்று 14 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 444ஆக உயர்ந்துள்ளது.
14 new Corona Positive cases in tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமத்தூர் வட்டத்தில் நான்கு பேர், போளூர் மற்றும் செங்கம் வட்டத்திலிருந்து இருவர், சேத்பட்டு, புதுப்பாளையம், காரப்பட்டு மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 14 பேருக்கு இன்று நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் செங்கல்பட்டும், மூன்றாவது இடத்தில் திருவண்ணாமலையும் உள்ளது.