தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்!

By

Published : Feb 18, 2023, 1:05 PM IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை: பிப்ரவரி 12ஆம் தேதி, திருவண்ணாமலையில் 2 ஏடிஎம் மையங்களிலும், கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏடிஎம் மையங்கள் என மொத்தம் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து சுமார் 75 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் 3 எஸ்பிஐ மற்றும் 1 இந்தியா ஒன் ஏடிஎம் மையம் ஆகும்.

இதனையடுத்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல் துறையினர் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து விமானம் மூலம் ஹரியானா சென்ற முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் நேற்று (பிப்.17) இரவு ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் காவல் துறையினர், திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1இல், நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசன், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவராகத்தில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் மார்ச் 3ஆம் தேதி வரை (13 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் திருவண்ணாமலை காவல் துறையினர், வேலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை அழைத்துவரப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள்.. காவல்துறை திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details