தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் சாராயம் காய்ச்சிய 13 பேர் கைது!

திருவண்ணாமலை: காவல் துறையினர் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

thiruvannamalai illegal liquor
tiruvannamalai illegal liquor

By

Published : May 11, 2020, 12:26 PM IST

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்படி, அனைத்து மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து தோக்கவாடி, எளாவூர், ஆவணியாபுரம், செந்தமிழ்நகர், காடகமன் பகுதிகளில் நேற்று மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, வைப்பூர் பகுதியில் ஆயிரம் லிட்டர், தோக்கவாடி பகுதியில் ஆயிரத்து 500 லிட்டர், அகரம் பகுதியில் 400 லிட்டர், சென்னந்தல் பகுதியில் 200 லிட்டர் என மொத்தம் மூன்றாயிரத்து 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

இதனிடையே, செந்தமிழ் நகர்ப் பகுதியில் 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த ராஜகுமாரி, கஸ்தூரி, ஏழுமலை, செல்வராஜ் என்பவர்களையும், வாய்விடந்தாங்கல் பகுதியில் 235 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த சின்னராஜ், சரவணன், முருகன், கோவிந்தன், ராஜீவ்காந்தி, சிவசக்தி, கண்ணதாசன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.


மேலும், ஆடையூர் பகுதியில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த செல்லமுத்து, அடியண்ணாமலை பகுதியில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 480 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவஞானம் ஆகியோரையும் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றக்ல் காவலில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details