தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு - கால்நடை மருந்தக கட்டிடடங்கள் திறப்பு

திருவண்ணாமலை: ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளனர்.

Veterinary Pharmacy Building

By

Published : Nov 24, 2019, 6:55 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விருது விளங்கினான் கிராமம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் அரட்டவாடி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூபாய் 63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் கட்டப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றித் திறந்து வைத்தபோது

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் நபார்டு திட்டத்தின் கீழ், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3.47 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 11 கிராமங்களில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த முன்று நாட்களில் இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு' - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details