17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி நேற்று (மே 30) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதில் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதைக் கொண்டாடும் விதமாக திருவண்ணாமலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அண்ணாமலையார் கோயிலில் வாசல் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ராமன் இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் ராமன் கூறுகையில், மோடியின் வெற்றி இந்துத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும். மோடியின் ஆட்சி அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக அமையும் என்று தெரிவித்தார்.