தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு... தென்அரசம்பட்டு மக்கள் தர்ணா!

திருவண்ணாமலை: 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தென்அரசம்பட்டு பணிதளப் பொறுப்பாளர்களை இடம் மாற்றம் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலைச் செய்திகள்  தென்அரசம்பட்டு  தென்அரசம்பட்டு மக்கள் போராட்டம்  then arasampattu porattam  then arasampattu  thiruvannamalai  100 day works
100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு..பணிதளப் பொருப்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம்

By

Published : Jul 17, 2020, 8:43 AM IST

திருவண்ணாமலை அடுத்த தென்அரசம்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் பணிதளப் பொறுப்பாளர்களை மாற்றக்கோரியும், தொடந்து தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக் கோரியும் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த தென்அரசம்பட்டு கிராமத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பொது மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தொடந்து தங்களுக்கு 100 நாள் வேலையில் வேலை தரக்கோரியும் தொடந்து பல வருடங்களாகப் பணிதளப் பொறுப்பாளர் பதவியில் இருந்து வரும் நபர்கள் பல முறைகேட்டில் ஈடுபட்டுவருவதால் அவர்களை உடனடியாக மாற்றக்கோரியும் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அக்கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து தர்ணா போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

இதையும் படிங்க:பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு - சக்தி பஹினி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details