தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவ்வாது மலையில் 1 லட்சம் விதைப் பந்துகள் தூவும் நிகழ்ச்சி! - திருவண்ணாமலையில் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை: போளூரில் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 1 லட்சம் விதைப் பந்துகள் தூவும் நிகழ்ச்சி ஜவ்வாது மலையில் நடைபெற்றது.

seed balls

By

Published : Sep 15, 2019, 1:47 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் சாணார் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இணைந்து விதைப்பந்துகளில் புங்கன் தான்றிகாய், மலைவேம்பு, கடுகாய் வேம்பு புளியன் உள்ளிட்ட விதைகளை கொண்டு 1.25 லட்சம் விதைப் பந்துகளை தயாரித்துள்ளனர்.

மாணவர்கள் தயாரித்த விதைப்பந்துகள்

ஆட்சியர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுடன் இணைந்து ஜவ்வாது மலை முழுவதும் விதைப் பந்துகள் தூவும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விதைப் பந்துகள் தூவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஜெய்மாருதி மோட்டார் உரிமையாளர் குரு மதிய உணவு வழங்கினார்.

ஜவ்வாது மலைக்குச் சென்றபோது

ABOUT THE AUTHOR

...view details