திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்திற்கு தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வந்துள்ளது. அப்போது மேல்நல்லாத்தூர் ஏரி சேற்றில் அந்த மான் சிக்கிக் கொண்டது.
சேற்றில் சிக்கிய புள்ளி மானை காப்பாற்றிய இளைஞர்கள்
திருவள்ளூர்: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.
deer
இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் புள்ளி மானை பத்திரமாக மீட்டு அங்கிருந்த விநாயகர் கோயிலில் வைத்தனர். பின் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.