திருவள்ளூர்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் இருசக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் பணிபுரிந்துவந்தார். இவரது பிறந்தநாள் கடந்த ஜுன் 17ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், அரவிந்தன், பிரவீன் குமார், சம்பா ஆகிய மூவரும் சேர்ந்து புழல் ஏரிக்கரையில் கடந்த ஜுன் 17ஆம் தேதி அரவிந்தனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். மேலும், பட்டாகத்தியில் கேக் வெட்டும் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.