தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் படிக்கட்டில் தூங்கிய இளைஞர் - தண்டவாளத்தில் விழுந்து உயிரிழப்பு - Youth sleeping on the railway staircase of Tiruvallur

திருவள்ளூர்: ரயில் படிக்கட்டில் தூங்கியவாறு பயணம் செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

தண்டபாளத்தில் இளைஞர் விழுந்து உயிரிழப்பு
தண்டபாளத்தில் இளைஞர் விழுந்து உயிரிழப்பு

By

Published : Feb 7, 2020, 4:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே அதிகாலையில் ரயிலில் பயணம் செய்த வடமாநிலத்தவர் படிக்கட்டில் தூங்கிக்கொண்டு சென்றதால் புட்லூர் ரயில் நிலையம் அருகே தவறி கீழே விழுந்து கால் துண்டாக்கப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் இளைஞரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் இவர் எப்படி கீழே விழுந்தார் என்றும் ரயில்வே காவல் துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தண்டபாளத்தில் இளைஞர் விழுந்து உயிரிழப்பு

அதிகாலையில் ரயில் நிலையம் அருகில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் உடலை 9 மணிவரை ரயில்வே காவல் துறையினர் அகற்றாமல் இருந்ததால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் அதனை பார்த்தபடி சென்றனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் குழந்தையுடன் தாய் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details