தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி! - ஏபிஜே

திருவள்ளூர்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Tiruvallur

By

Published : Oct 15, 2019, 6:58 PM IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனைச் சிறப்பிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி நிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

பள்ளி, கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மேலும், இப்பேரணியில் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஏபிஜே அப்துல்கலாமை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்க முயல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அப்துல்கலாம் படத்துக்கு வைகோ மரியாதை

ABOUT THE AUTHOR

...view details