தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரண்! - திருவள்ளூரில் இளைஞர் கொலை

திருவள்ளூர்: கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்ற உறவுக்கார இளைஞரை 19 வயதுடைய இளம்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் கொலை
வாலிபர் கொலை

By

Published : Jan 3, 2021, 7:36 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்ற உறவினரை தற்காப்புக்காகக் கொன்றதாக 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், சரணடைந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த இளம்பெண், தனது உறவினர் என்பதால் அவரை எச்சரித்தார். ஆனாலும் அவர் எல்லை மீறியதால் தன்னைத் தற்காத்துக் கொள்ள இளைஞரை வெட்டிக் கொன்றதாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதுடன், கொலைக்கு குடும்ப பிரச்னை போன்ற காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இருதரப்பினருக்கு இடையே மோதல் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details