தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! - திருவள்ளூர் விபத்து செய்திகள்

உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

By

Published : Jan 27, 2021, 4:53 AM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மதன். இவர் தனது உறவினர் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக ஊத்துக்கோட்டை அடுத்த சூளமேனி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். சூளைமேனி பகுதியிலிருந்து தேர்வாய் கண்டிகை செல்லும் சாலையில், அவர் சென்று கொண்டிருந்த போது, முன்னால் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பிரேக் போட்டதால், அதன் பின்னால் வந்து கொண்டிருந்த மதன், தனது வண்டியை நிறுத்த முடியாமல், நேராக டிராக்டரில் மோதியதாக தெரிகிறது.

இந்த விபத்தில், தலையில் அடிபட்ட மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி தலைமையிலான காவலர்கள் இறந்த இளைஞரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இளைஞர் விபத்தில் இறந்து போனது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூளமேனியிலிருந்து சிப்காட் செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாததே விபத்திற்கான காரணம் எனவும் கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details