தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூதன முறையில் கொள்ளையடித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஏடிஎம் ஏஜென்ட்டிடம் நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 13, 2023, 9:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர், கோபி. இவர் ஹிட்டாச்சி எனப்படும் தனியார் ஏடிஎம்-மில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11-தேதி இந்தியன் வங்கி திருவாலங்காடு கிளையில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு, அதனை திருவாலங்காடு அரக்கோணம் சாலையில் உள்ள ஹிட்டாச்சி ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்றுள்ளார்.

ஆனால், 80 ஆயிரம் ரூபாயை மட்டும் நிரப்பிய அவர் அங்கிருந்து மீதமுள்ள 2 லட்சத்து 10 ஆயிரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 100 ரூபாய், பத்து ரூபாய் மற்றும் ஐடி கார்டு கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கோபி இறங்கி தேடிய போது வாகனத்தில் வைத்திருந்த 2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மர்ம அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோபி, இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டிச்சென்றும் பிடிக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து கோபி திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரைத் தேடி வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான கட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த ஓ.ஜி. குப்பம் பகுதியைச் சேர்ந்த அங்கையன் என்கிற சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

ABOUT THE AUTHOR

...view details