தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரணி ஆற்றின் பள்ளத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - thiruvallur district news

திருவள்ளூர்: ஆரணி ஆற்றின் பள்ளத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

By

Published : Jan 17, 2021, 10:00 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காணும் பொங்கல் விழாவின்போது ஏராளமானோர் கூடுவது வழக்கம். கரோனா தொற்றால் பழவேற்காட்டில் படகு சவாரி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர் உயிரிழப்பு

சென்னை மணலியிலிருந்து பாலாஜி(32), சரவணன், கார்த்திக், குணசேகர் ஆகிய 4 பேர் பழவேற்காட்டிற்கு வந்தனர். காவல்துறையினர் தடுத்து விட்டதால், அவர்கள் ஆண்டார்மடம் அருகே ஆரணி ஆற்றில் குளித்தனர். வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் ஆற்றின் கரை உடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் 4 பேரும் சிக்கினர். உடனே அங்கு இருந்தவர்கள் சரவணன், கார்த்திக், குணசேகர் ஆகிய 3 பேரை காப்பாற்றினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், பள்ளத்தில் சிக்கிய பாலாஜியை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கத்தியால் குத்தி இளைஞர் கொலை: மது போதையில் ஏற்பட்ட விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details