தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைவிட்ட அரசாங்கம்: மக்கள் முயற்சியால் தூர்வாரப்படும் குளம்! - குளம்

திருவள்ளூர்:திருநின்றவூர் அருகே நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள குளத்தை அப்பகுதி மக்களே தூர்வாரி வருகின்றனர்

cleaning up water body

By

Published : Jul 26, 2019, 11:11 AM IST

திருநின்றவூர் அருகே நடுகுத்தகை ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.இந்தப் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான குளம் ஒன்று அவர்களின் நீராதாரமாக விளங்கியுள்ளது.

பல நாட்களாக தூர்வாரப்படாமல் கிடந்த இந்தக் குளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடுகுத்தகை கிராமம்

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்துள்ளனர். இதற்காக மக்களிடம் நிதி திரட்டி குளத்தில் கிடந்த திடக்கழிவுகளை அகற்றியிருக்கிறார்கள்.

நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்

மேலும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். இப்பணிகளை தொடர்ந்து சில நாட்கள் செய்யவுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details