தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் முடிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது! - latest thiruvallur news

திருவள்ளூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

youth-arrested-in-thandayarpet-for-cheating-a-young-girl
திருமணம் முடிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

By

Published : Jul 10, 2021, 12:11 PM IST

சென்னை:தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது நிரம்பிய இளம்பெண், தனது உறவுக்காரரான மோசிக் என்பவரை கடந்த ஒருவருடமாக காதலித்துவந்துள்ளார்.

உன்னை திருமணம் முடித்துக்கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை தொடர்பு வைத்துள்ளார் மோசிக். இதில், கர்ப்பம் ஆன அந்த இளம்பெண் , தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மோசிக்கிடம் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மோசிக், கருக்கலைப்பு மாத்திரையை இளம்பெண்ணுக்கு கொடுத்துள்ளார். கருவை கலைக்க விரும்பாத இளம்பெண் தொடர்ந்து மோசிக்கை திருமணம் முடித்துக்கொள்ள கேட்டுள்ளார்.

ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மோசிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் மோசிக்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆந்திராவில் படித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details