திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழ்நாடு எல்லைப்பகுதி வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் ஆந்திர எல்லைப் பகுதியான பூணிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆந்திராவிலிருந்து 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது - திருவள்ளூர் மாவட்ட செய்தி
திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து இரண்டு கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து பூணிமாங்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணுடன் வந்த சீனிவாசன் (38) என்பவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவரை சோதனையிட்டனர். இரண்டு கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் இவருடன் வந்த பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த சீனிவாசனை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.