தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாலிபால் விளையாட்டில் தகராறு: கல்லைப் போட்டு இருவர் கொலை! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: பொன்னேரி அருகே வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இருவரை கல்லைப் போட்டு கொலை செய்தவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வாலிபால் விளையாட்டில் தகராறு: கல்லைப் போட்டு இருவர் கொலை
வாலிபால் விளையாட்டில் தகராறு: கல்லைப் போட்டு இருவர் கொலை

By

Published : Mar 9, 2020, 3:49 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில், அப்பகுதி இளைஞர்களுக்கும், பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

போட்டியின்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி அடிதடியாக மாறியது. இதில், அங்கிருந்த கற்கலால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

அப்போது, பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர், வீரா ஆகியோரை, ஆலாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல் துறையினர். இரு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்த இளைஞர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்த காவல் துறையினர்

மேலும், 2018ஆம் ஆண்டில் ஆலாடு பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை

ABOUT THE AUTHOR

...view details