திருவள்ளூர்:சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி சார்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற ஏழை மக்களுக்கு ஆதரவளித்து நாள்தோறும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை சொசைட்டியின் நிறுவனத் தலைவர் ஆறுமுகம் தாமஸ் வழங்கிவருகிறார்.
மேலும், இருசக்கர வாகன விழிப்புணர்வு குறித்து ஆறுமுகம் தாமஸ் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றினால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்ற நிலையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
லடாக் டூ கன்னியாகுமரி
இதனையடுத்து, அரசுக்கு உதவும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 200 நாள்களுக்கும் மேலாக தனது இருசக்கர வாகனத்தில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், சுமார் 50 கிலோ எடையுள்ள ராக்கெட் வடிவிலான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகளை வடிவமைத்து சென்னையிலிருந்து லடாக் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் லடாக்கிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்.
இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் தடுப்பூசி விழிப்புணர்வு மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இருசக்கர வாகனம் மூலம் பயணம் மேற்கொண்டு மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். இன்னும் சில நாள்களில் வித்தியாசமான வடிவில் வாகனத்தை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில்வே ஸ்டேஷனில் குடும்பமாக லூட்டி அடிக்கும் யானைகள்