திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட திருவீழிமிழலை ஊராட்சியில் வரதராஜன் என்பவரது மனைவி கவிதா (25). பொறியியல் பட்டதாரியானஇவர், தற்போது நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருவீழிமிழலை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், ”நான் முதல் முதலாக இந்தப் பதவிக்கு போட்டியிட்டேன். என்னுடைய முதல் தேர்தலிலேயே படித்தவரான எனக்கு மக்கள் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.