திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திலுள்ள 33 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றியின் உச்சியில் ஏறிய வடமாநில இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் இது குறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், டவுன் காவல் நிலைய காவல் துறையினரும் வடமாநில இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஆனால் அந்த இளைஞர் இறங்க மறுத்ததால் தீயணைப்பு வீரர்கள் தங்களிடம் இருந்த பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் மின்மாற்றியின் உச்சிக்கு ஏறி 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரை கயிற்றால் கட்டி சாதுரியமாக மீட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற வட மாநில இளைஞர் மீட்பு தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாய் ப்ரோ ஆதவ் (35) என்பது, இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!