தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு! - Tiruvallur young man murder case

திருவள்ளூர்: மேல்நல்லாத்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு!

By

Published : Aug 28, 2019, 9:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கேட்டர்பில்லர் தனியார் கனரக வாகன தொழிற்சாலை பின்புறமுள்ள ஏரி கரையை ஒட்டிய முட்புதரில் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் பாதி மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு!

இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மெல்நல்லதூர் பகுதியைச் சேர்ந்த ரோஸ் நாயுடு என்பவரின் மகன் மகேஷ் என்ற மகேஷ் குமார்(20) என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details