திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பெரியார் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஸ்வரன். இவர் டிப்ளமோ வரை படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்துள்ளார்.
வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கு: 7பேர் கைது! - திருவள்ளூவர்
திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் விக்னேஸ்வரனை சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் விக்னேஷ்வரனை கொலை செய்த, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ்(23) மற்றும் அவர் நண்பர்களான திருநின்றவூரை சேர்ந்த ராஜ்குமார்(22), கோவில் குப்பத்தை சேர்ந்த தினேஷ்(24), பெருமாள்பட்டை சேர்ந்த நரேஷ்(23), அஜித் (22), அஸ்வின்(20), கோபிராஜ்(24) ஆகிய 7 பேர் என தெரிய வந்தது. இதனையடுத்து ஏழு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.