திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்த சத்தியநாதன் (21). இவர் கடந்த 6ஆம் தேதி மாலை குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது நெமிலிச்சேரி- வண்டலூர் புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பாலத்தின் மீது போதையில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 8 அடி உயரத்தில் இருந்து தவறி பின்பக்கமாக கீழே விழுந்தார்.
குடிபோதையில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு! - ஆவடி அரசு மருத்துவமனை
திருவள்ளூர்: ஆவடி அருகே குடிபோதையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
குடிபோதையில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு!
இதில், பலத்த காயமடைந்த சத்தியநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.