தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனத்திற்கு வழி விடாத அரசுப் பேருந்து - ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது - டாட்டா ஏசி வாகன ஓட்டுநர் கைது

திருவள்ளூரில் டாடா ஏஸ் வாகனத்திற்கு வழி விடவில்லை எனக் கூறி, அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது
பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது

By

Published : Dec 14, 2021, 10:48 PM IST

திருவள்ளூர்:திருப்பாச்சூர் பகுதியில் திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அதன் பின்னால் சிறிய சரக்கு ரக வாகனமான டாடா ஏஸ் வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது, டாடா ஏஸ் வாகனத்திற்கு அரசுப் பேருந்து வழி விடவில்லை எனக்கூறி, பேருந்தை முந்திச்சென்ற சரக்கு வாகன ஓட்டுநர் அரசுப் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநர் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த பயணிகள் டாடா ஏஸ் ஓட்டுநரை மடக்கி, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல் துறையினர் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த டாடா ஏஸ் ஓட்டுநர் சாரதி (20) என்ற இளைஞரைப் பிடித்தனர்.

பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது

தொடர்ந்து, காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயனை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த காவல் துறையினர், பின்னர் டாடா ஏஸ் வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், டாடா ஏஸ் வாகன ஓட்டுநர் சாரதி மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலர் - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details