தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிப்போம்... வாக்களிப்போம்... அனைவரும் வாக்களிப்போம்! - வாக்காளர்

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்களால் நீச்சல் குளத்தில் யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

TVL

By

Published : Mar 31, 2019, 3:57 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி பள்ளி மாணவ மாணவியா் யோகா செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மஜேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் அனைவரும் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்போம் எங்களது வாக்குகளை நிற்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

TVL

இதைத் தொடர்ந்து யோகாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பெற்றோர் கலந்துகொண்டனர்.



ABOUT THE AUTHOR

...view details