உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புகையிலை குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த, பட விளக்க கண்காட்சியுடன் பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
புகையிலை ஒழிப்பு தினம்: மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை, போதை பழக்கங்களில் இருந்து விடுபட, அது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை பள்ளி மாணவர்கள் நடத்தினார்கள்.
சிகரெட்டில் 48 விஷப் பொருட்கள் உள்ளது அது புற்றுநோயை உண்டாக்க கூடியது. ஒரு சிகரெட் ஐந்து நிமிடம் ஆயுளை குறைக்கும். புகையினால்தான் புற்றுநோய் ஏற்பட்டு உலகில் அதிகமானோர் இருக்கின்றனர். புகைப்பவர் அருகில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அதே பாதிப்பு ஏற்படும். என்பதனை விளக்கும் வகையில் அந்தப் பேரணியானது இருந்தது.
இந்தப் பேரணியை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம், விவேகானந்தா பள்ளியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.