திருவள்ளூர்தீபன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தோழர்கள் வாக்கிங் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடல் அருகே தொடங்கிய இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஓடி தங்களது திறமையை நிரூபித்தனர்.
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மாரத்தான்!
திருவள்ளூரில் உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மார0த்தான் போட்டி நடைபெற்றது. இதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அமைச்சர் நாசர்
பெண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவுகளில் தலா மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் 10 மணி நேர சிலம்பம் போட்டி