தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா - உலக நுகர்வோர் தினம்

திருவள்ளூர்: உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு, திருத்தணியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நுகர்வோர் உரிமை தின விழா சிறப்பாக நடைபெற்றது.

உலக நுகர்வோர் உரிமை தினம்

By

Published : Mar 15, 2019, 4:45 PM IST

நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக நுகர்வோர் உரிமை தின விழா திருத்தணியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நுகர்வோர் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் எம்எல் ரமேஷ் தலைமையேற்று நடத்தினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகச் சார்பு நீதிபதி எம்.ஏ கபீர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுமக்களுக்குச் சேவை செய்தமைக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதை நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே. ரோஜா, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம். நரசிம்மன் ஆகியோர் பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details