சோழவரம் அருகே உள்ள இருளிப்பட்டு கிராமத்தில் செயல்படும் தேஜா ரப்பர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த 14 நாட்களாக அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தடுத்து நிறுத்திய காவல்துறை: சாலை மறியலில் குதித்த தனியார் நிறுவன ஊழியர்கள்! - SOZHAVARAM
திருவள்ளூர்: சோழவரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிராக குடும்பத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சென்ற தொழிலாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்திதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால், அதுகுறித்து அந்நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று, சிஐடியு மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினரின் தடுப்பை மீறி சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்ற அவர்களை தடுத்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் ஜெகன்நாதபுரம் சாலையில் அமர்ந்து சாலையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர், வாகனத்தில் கொண்டுசென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.