திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூர் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு 'பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம்' சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மே தின விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்: மே தினத்தை முன்னிட்டு 'பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம்' சார்பில் நல்லாத்தூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மே தின விழிப்புணர்வு பேரணி
சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, 'தண்ணீர் சேமிப்பு', 'மின்சார சிக்கனம்', 'சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்', 'வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்', 'அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்', 'நெகிழி ஒழிப்பு' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முழுக்கமிட்டனர்.