தமிழ்நாடு

tamil nadu

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தி சீல் வைக்கும் பணிகள் தொடக்கம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தி, சீல் வைக்கும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

By

Published : Feb 14, 2022, 10:15 AM IST

Published : Feb 14, 2022, 10:15 AM IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் சீல் வைக்கும் பணி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் சீல் வைக்கும் பணி

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி சார்பில் அதன் தலைவர் முதல் தொண்டர்கள் வரை களத்தில் இறங்கி பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றார்.

இதனையடுத்து, நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 318 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1 நகராட்சி 2 பேரூராட்சிகளில் உள்ள 3 வார்டுகளில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் சீல் வைக்கும் பணி

இதைத்தொடர்ந்து, 315 பதவிகளுக்கு 830 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பிவைத்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் சீல் வைக்கும் பணி

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 51 வாக்குச்சாவடி மையங்களுக்கு 51 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 51 வாக்குப்பதிவு எந்திரங்கள், 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 62 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 62 வாக்குப்பதிவு எந்திரங்களுக்குச் சின்னம் பொருத்தும் பணி நேற்று (பிப். 13) தொடங்கியது.

இதேபோல், ஆவடி மாநகராட்சி, திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 5 நகராட்சி திருமழிசை, ஆரணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, நாரவாரிக்குப்பம், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சி அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வார்டாக நடைபெற்றது.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் மம்தா உரையாடல்: விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details