தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தின கொண்டாட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

womens-day-celebration-sports-competition-for-government-servants-at-collectors-office
womens-day-celebration-sports-competition-for-government-servants-at-collectors-office

By

Published : Mar 8, 2020, 7:38 AM IST

மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தையொட்டி அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கான பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் அதைவிட முக்கியம் எந்தப் போட்டிகளாக இருந்தாலும் அதில் முதலில் கலந்துகொள்ள துணிச்சல் வேண்டும் எனவும், வெற்றி, தோல்வி சகஜமான ஒன்றுதான், ஆகையால் அனைவரும் துணிச்சலும் எந்த வகையான போட்டியாக இருந்தலும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்த கொடூர கொரோனா!

ABOUT THE AUTHOR

...view details