திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் ராகவன். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு திருநின்றவூரில் உள்ள தனியார் (ஏ.ஜி.நர்சிங் ஹோம்) மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் ராகவன் உயிரிழந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் தீக்குளிக்க முயற்சி! - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர்: கணவர் உயிரிழப்புக்குக் காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
ராகவனின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம். எனவே, மருத்துவமனையின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நந்தினி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால், இந்தப் புகார் குறித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (நவம்பர் 3) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நந்தினி தீக்குளிக்க முயன்றார். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.