திருவள்ளூர்:Kanimozhi MP:மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள் ஏற்பாட்டில் திருவள்ளூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தற்போதைய ஆட்சியின் மீது பெண்களின் நம்பிக்கை
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கனிமொழி, ”காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி முடிவு தேர்தலுக்குப் பிறகுதான் உறுதி செய்யப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிகப் பெண்கள் வெளிப்படைத்தன்மையாக பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால், கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றம்கூட தற்போது நடைபெறும் ஆட்சியில் சொல்ல முன் வந்துள்ளனர். திருவொற்றியூர் அடுக்குமாடிக் குடியிருப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” எனக் கூறினார்.