திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பிரியா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்ல செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காந்தி நகர் காவல்துறை உதவி மையம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சோழவரம் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை காவலர் ஒருவர் பிரியாவின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியா மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், அவரது கால் ஒடிந்தது. பின்னர் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அப்பகுதி பொதுமக்கள் சோழவரம் காவல் துறையினரின் செயலைக் கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.