திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த திருவூர் கிராமம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் லோகம்மாள்(60). இவர் நேற்று (நவம்பர் 8) தனது வீ்டடில் மின் விசிறியை இயக்க செய்வதற்காக சுவீட்ச்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
திருவள்ளூரில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு - திருவள்ளூரில் பெண் ஒருவர் பலி
திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
women-died-due-to-electricity-in-thiruvallur
இதையடுத்து உறவினர்கள் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி லோகம்மாள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்! மின்சாதனப் பொருட்களும் சேதம்!