திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கீதாஞ்சலி(50). இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பி.காம் பட்டதாரியான மகள் சிவரஞ்சனியுடன்(24) வசித்து வந்தார்.
இவர் போதிய வருமானம் இல்லாததால், தனது மகளைப் படிக்க வைக்க ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தராததால் கீதாஞ்சலியிடம், கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி வீட்டிலிருந்த மின்விசிறியில் தனது மகள் சிவரஞ்சனியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.