தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலர் எழுதி பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் - குறுந்தகடு வெளியீடு - Woman police released Corona awareness song at Thiruvallur

திருவள்ளூர் : பெண் காவலர் ஒருவர் எழுதி பாடிய கரோனா விழிப்புணர்வு பாடலின் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

பெண் காவலர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல்
பெண் காவலர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல்

By

Published : May 22, 2020, 12:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் பெண் காவலர் சசிகலா. இவர், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திரைப்பட பாடல் மெட்டில் தான் எழுதிய கரோனா வைரஸ் குறித்த பாடலை, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாடியுள்ளார்.

சசிகலா பாடிய இந்தப் பாடல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், காவலரின் இசை ஆர்வத்தைக் கண்ட அவரது உயர் அலுவலர்கள், இந்த கரோனா விழிப்புணர்வு பாடலை அவரை பாடவைத்து, தற்போது குறுந்தகடாக வெளியிட்டுள்ளனர். இதனை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் வெளியிட, காவலர் சசிகலா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சக்திவேல், உதவிக் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், காவலர் சசிகலா மீண்டும் இந்த கரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க :ஊருக்கு செல்ல அனுமதி கேட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details