தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும்’ - எஸ்பிபி சரண் தகவல்! - S. P. Charan latest interview

திருவள்ளூர்: அப்பா நினைவாக அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி
எஸ்பிபி

By

Published : Sep 27, 2020, 3:54 PM IST

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நேற்று (செப்.26) நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து எஸ்பிபியின் மகன் சரண், இன்று (செப்.27) தாமரைப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, ”அப்பா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பண்ணை வீட்டில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க உள்ளேன். கிட்டதட்ட 50 நாள்களாக எங்களது குடும்பத்துடன் இருந்து அப்பாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அவரின் இசை மக்களின் சொத்து. எங்களுடன் துணையாக இருந்தவர்களுக்கு மிக்க நன்றி” என்றார்.

எஸ்பிபி சரண்

எஸ்பிபியின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், இன்று எஸ்பிபியின் பண்ணை வீட்டின் வெளியே இருந்தபடியே, அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். தொடர்ந்து குடும்பம், குடும்பமாக வருபவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுப்பதால், தங்களுக்கு பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்

ABOUT THE AUTHOR

...view details