திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பூண்டி மின் பகிர்மான பிரிவில் வயர் மேனாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், புல்லரம்பாக்கம் ஜெஜெ.நகர் பகுதியில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்வதற்காக கண்ணியம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையும், உமாபதியும் சென்றுள்ளனர்.
அப்போது, மின்மாற்றியின் மேல் ஏறி சரி செய்து கொண்டிருந்த உமாபதி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை இது குறித்து உடனடியாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.