திருவள்ளூர் மக்களவைத் தனி தொகுதியில் அமமுக வேட்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்ராஜா, நேற்று திருவள்ளூர் மாவட்டம்சேகண்யம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் பூஜை வழிபாடு செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை அங்கிருந்தே தொடங்கினார்.
தொடர்ந்து, திறந்த வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே, பூங்குளம் கிராமத்தில் வந்த அவரிம் தங்கள் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வாக்குமட்டும்கேட்டு ஏன் வருகிறீர்கள்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
திருவள்ளூரில் அமமுக வேட்பாளர் பொன்ராஜா பரப்புரை செய்தபோது இதற்குப் பதிலளித்த அவர், தனக்கு வாக்களித்தால் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்து வேணுகோபால் செய்யாத அடிப்படை வசதியான பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்தார்.