திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் செம்பேடு ஊராட்சியில் ‘அதிமுகவை புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கோடுவெளி தங்கம்முரளி தலைமையில் நடைபெற்றது.
பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், கிராம மக்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.